உள்ளூர் செய்திகள்

தொடர்ச்சி

தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் லயோலா மணி பேசியதாவது: இந்த அரசு எப்போதும் உங்களுடன் பக்க பலமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு கஷ்டங்கள், வேதனை அனுபவிக்கிறீர்கள் எங்களுக்கு தெரியும். உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் தெரியும். சென்னையில் ஒவ்வொரு தெருவும் சுத்தமாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான், நீங்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை. முதல்வர் சந்திக்க நெறிமுறை உள்ளது. அதன்படி, அவர் ,உங்களை விரைவில் சந்திப்பார். உங்களுடைய கோரிக்கைகளை, அவர் முன் வைக்கலாம். காவல்துறையினர் அராஜகமாக ஈடுபட மாட்டார்கள். சென்னை மாநகராட்சி வளாகத்துக்குள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். உழைப்போர் உரிமை இயக்கம் தலைவர் பாரதி பேசியதாவது: பணியாளர்கள், இந்த இடத்தில் போராடுவதற்காக அரசு நடவடிக்கை எடுக்கும்.  நமக்கு தேவையானது, கிடைக்கும். அந்த நம்பிக்கையை லயோலா மணி, தன்னிடம் கூறியுள்ளார். முதல்வர் விஜயை சந்தித்து தீர்வு காணும் வரை, அறவழி போராட்டம் தொடரும், என, கூறியதை அடுத்து, துாய்மை பணியாளர்கள் சமாதானமாக கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை