உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடஒதுக்கீடு கேட்டுதொடரும் போராட்டம்

இடஒதுக்கீடு கேட்டுதொடரும் போராட்டம்

பூந்தமல்லி:தமிழக அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் 1 சதவீதம், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். இது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில், பார்வையற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.பூந்தமல்லி போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதனால், பூந்தமல்லி டிரங்க் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி