உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலி

வியாசர்பாடி: ஜார்கண்டைச் சேர்ந்தவர் சுரேஷ் மேத்தோ, 30. மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு மின்வாரிய அலுவலகத்தில், ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.கடந்த 5ம் தேதி, வியாசர்பாடி, வள்ளலார் கோவில் எதிரேயுள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டவர் மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்தபோது, அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.கே.எம்.சி., மருத்துவமனையில் 54 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை