ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
திருவொற்றியூர்,திருவொற்றியூர், இந்திரா நகரில், மத்திய அரசின் கான்கார்ட் சரக்கு பெட்டக முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 15 ஒப்பந்த பணியாளர்களை பொய் குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டியும், மீண்டும் பணி வழங்க கோரியும், பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன், நேற்று மதியம் நிறுவன பிரதான வாயில் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால், கன்டெய்னர் லாரிகள், நிறுவனத்திற்குள் செல்ல முடியாமலும், வெளியே முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த திருவொற்றியூர் போலீசார், பேராட்டக்காரர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.