உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சம்பள பாக்கியால் ஒப்பந்ததாரரின் மண்டை உடைப்பு

சம்பள பாக்கியால் ஒப்பந்ததாரரின் மண்டை உடைப்பு

ஜெ.ஜெ.நகர், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 46. இவர், பிளம்பிங், எலக்ட்ரீஷியன் வேலைகளுக்கு ஆட்களை அழைத்து செல்லும் தொழில் செய்து வருகிறார்.இவர், ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நேற்று காலை சென்று கொண்டிருந்தார். பிளம்பிங் உள்ளிட்ட வேலைக்கு அவரால் அழைத்து செல்லப்பட்ட நான்கு பேர் அவரை வழிமறித்தனர்.சம்பள பாக்கி இருப்பதாகவும், அதை தரவேண்டும் எனவும் கூறி, சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த கல்லை எடுத்து, அவரது தலையில் தாக்கி தப்பினர்.ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த சரவணனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து, சரவணனை தாக்கிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ