மேலும் செய்திகள்
ஆயுதப்படை எஸ்.ஐ., மீது எழும்பூரில் சரமாரி தாக்கு
20-Jul-2025
வியாசர்பாடி, கைதிகளை அழைத்து சென்ற வாகனத்தில், மர்ம நபர்கள் கஞ்சா உருண்டை வீசி சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஆயுதப்படை எஸ்.ஐ., அமரன் தலைமையிலான 17 போலீசார் நேற்று, புழல் சிறையில் இருந்து 14 கைதிகளை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை மையத்தில் நடந்த விசாரணைக்கு அழைத்து சென்றனர். கைதிகளை, அறிவுரை மையத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் வாகனத்தில் கைதிகளை சிறைக்கு அழைத்து சென்றனர். வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, அம்பேத்கர் கல்லுாரி சிக்னல் வழியாக வாகனம் சென்றது. அப்போது, வாகனத்தை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த மர்ம நபர் கும்பல், கஞ்சா பாக்கெட்கள் அடங்கிய உருண்டையை, வாகனத்தின் உள்ளே வீசி விட்டு தப்பினர். வாகனத்தில் கைதிகள் இருந்ததால், மர்ம நபர்களை போலீசார் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, புதுப்பேட்டையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் இருதயராஜ் கொடுத்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். ***
20-Jul-2025