கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
சென்னை :கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025 - 26ம் ஆண்டு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள், www.tncu.tn.gov.inஎன்ற இணையத்தில், நாளை மறுநாள் முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு இல்லை.விண்ணப்பங்கள், நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளபடமாட்டாது. பயிற்சி கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044- 2536 0041, 9444 470013 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.