உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிற்பயிற்சியில் சேர மாநகராட்சி அழைப்பு

தொழிற்பயிற்சியில் சேர மாநகராட்சி அழைப்பு

சென்னை; 'மாநகராட்சி தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு, மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில், 14 முதல் 40 வயது வரையிலானோர் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. படிக்கும்போதே தொழிற்சாலைகளில், 5,000 முதல் 10,500 ரூபாய் சம்பளத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகை, புதுமை பெண் திட்டத்தில், 1,000 ரூபாய் வழங்கப்படும். அதன்படி, கணினி இயக்குபவர், குழாய் பொருத்துநர், மின் பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பொருத்துநர் ஆகிய ஆறு வகை படிப்புகளுக்கு, 368 இடங்களுக்கு, 10ம் வகுப்பு முதல், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். குழாய் பொருத்துநர் படிப்புக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இந்த படிப்புகளில் சேர, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஐஸ்ஹவுஸ், லாயிட்ஸ் காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ