உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் விடுவிக்க மறுக்குது மாநகராட்சி

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் விடுவிக்க மறுக்குது மாநகராட்சி

சென்னை; இடமாறுதல் ஆணை பெற்ற பிறகும் ஆசிரியர்களை விடுவிக்க, சென்னை மாநகராட்சி மறுப்பதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்த மாதம் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த, 41 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள், பிற மாவட்டங்களில் உள்ள, அரசு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் பெற்றனர். இதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களில், ஏழு ஆசிரியர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு, பணியிட மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 34 ஆசிரியர்களை, சென்னை மாநகராட்சி விடுவிக்க மறுப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: சம்பந்தப்பட்ட பணியிடத்தில், புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வரை, விடுவிக்க முடியாது என, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், பணியிட மாறுதல் ஆணை பெற்றும், உரிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் செப்., 6ல் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. அப்போது, குறிப் பிட்ட பணியிடத்துக்கு ஆசி ரியர்கள் வந்தால், பணியிட மாறுதல் ஆணை பெற்றவர்கள் உடனே விடுவிக்கப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை