உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழவந்தாங்கலில் வெள்ள பாதிப்பை தடுக்க மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை ஏர்போர்ட், ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கும் மழைநீரால் பிரச்னை

பழவந்தாங்கலில் வெள்ள பாதிப்பை தடுக்க மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை ஏர்போர்ட், ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கும் மழைநீரால் பிரச்னை

ஆலந்துார்,ஆலந்துார் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன், கவுன்சிலர்கள், பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:ஆலந்துாரில், மழைநீர் வடிகாலில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் அடங்கிய பிளாஸ்டி பேக் அகற்றப்படாமல் உள்ளது. மாதவபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் ஏராளமான கேபிள்கள், மின் கம்பங்களில் தொங்கவிடுவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்யும் தெரு நாய்களுக்கு முடி கொட்டி, உடலில் சொறியுடன் காணப்படுகிறது.நியூ காலனி பகுதியில் மழைநீர் வெளியேற உரிய வடிகால் வசதி இல்லை. ஆதம்பாக்கம் பகுதியில் கீறிப்பிள்ளை அதிகம் காணப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.மீனம்பாக்கத்தில் பல மின்கம்பங்கள் உடைந்து காணப்படுகின்றன. பல இடங்களில் உள்ள பழைய மழைநீர் வடிகால் மழைநீரை உள்வாங்கும் நிலையில் இல்லை. மழைக்காலத்தில் மின்தடை இருப்பதால், வீடுகளில் சேகரமாகும் மழைநீரை வெளியேற்ற ஒவ்வொரு வார்டிற்கும் மோட்டார் வழங்க வேண்டும்.மணப்பாக்கத்தில், 40 குடியிருப்புகள் உடைய தெருவில் பாதாள, குடிநீர் திட்டம் புறக்கணிக்கப்பட்டது. அங்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.விமான நிலைய வளாகம், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்த வெளியேறும் மழைநீர் பழவந்தாங்கல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நந்தம்பாக்கம் பர்மா காலனி சாலைகள் படுமோசமாக உள்ளன. முகலிவாக்கத்தில், 2,500க்கும் மேற்பட்ட காலிமனைகள் உள்ளன. அவற்றில் தேங்கும் மழைநீரால் கொசுக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. முகலிவாக்கம் - மதனந்தபுரம் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.தலைவர் சந்திரன் பேசியதாவது:மண்டலம் முழுதும் இம்முறை, மழைநீர் தேங்கிய இடங்களை மாநகராட்சி அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து, அடுத்த முறை தேங்காத அளவிற்கு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மண்டலத்தில், சில இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவது குறித்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நங்கநல்லுார், 4வது பிரதான சாலை ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், 29 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை