ரூ.3.50 லட்சம் 15 சவரன் மோசடி தம்பதி கைது
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் அமுல், 52. இவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினரான கலைவாணி என்பவர், கடந்த 2022ல், தீபாவளி பண்டு சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்தார்.இதனால், அமுலிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். மூன்று மாதத்தில் தருவதாக உறுதியளித்தார். இதனால், அமுல் தான் அணிந்திருந்த தாலி சரடு, மகனின் செயின் உள்ளிட்ட 15 சவரன் தங்க நகை மற்றும் 3.50 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.பின், இரண்டரை ஆண்டுகளாகியும் பணம் மற்றும் தங்க நகை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசில், அமுல் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, எம்.எம்.கார்டன், 3வது தெருவைச் சேர்ந்த குமரன், 37, மற்றும் அவரது மனைவி பானுபிரியா, 35, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.