உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை

போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை

புளியந்தோப்பு, புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறையில், மர்ம நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவரிடம் ஏழு வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 35 என்பதும், இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.இவருக்கு உடந்தையாக இருந்த மனைவி சுதா, 36,வையும் கைது செய்த போலீசார், இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல் என்ற சிங்கம் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை