உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய்கள் கடித்த குரங்கு குட்டியை பார்வையிட அனுமதி டாக்டர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

நாய்கள் கடித்த குரங்கு குட்டியை பார்வையிட அனுமதி டாக்டர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கோவையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வி.வல்லையப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடந்தாண்டு டிச., 4ல் நாய்களுக்கு கருத்தடை முகாம் நடந்தது. அப்போது, நாய்களால் கடிபட்டு காயமடைந்த 200 கிராம் எடையுள்ள குரங்கு குட்டியை, வன காவலர் கொண்டு வந்தார். நாய்கள் கடித்ததில், குரங்கு குட்டியின் இடுப்பு பகுதிக்கு கீழ் செயல் இழந்தது. 'ரேபிஸ்' பாதிப்பும் இருந்தது.என் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, 10 மாதங்கள் சிகிச்சை அளித்தேன். பின், குரங்கு குட்டி குணமானது.கடந்த மாதம் 26ல், குரங்கு குட்டியை வனத்துறையினர், என்னிடமிருந்து வாங்கி சென்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் விட்டனர். அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அந்த குரங்கு குட்டி முழுமையாக குணமடையும் வரை, என் கட்டுப்பாட்டில் விட, வனத்துறைத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை, வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு நேரில் பார்வையிட மனுதாரருக்கு அனுமதியளித்து, குரங்கு குட்டி மருத்துவரை அடையாளம் கண்டு கொண்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கவும், வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14க்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை