குழாயில் விரிசல் சாலையில் திடீர் பள்ளம்
சென்னை, கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஸ்மித் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டையில், ஸ்மித் சாலை உள்ளது. நேற்று மதியம், இச்சாலையில் திடீரென பள்ளம் விழுந்தது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படாமல் இருக்க, அண்ணாசாலை போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்தனர். தகவலறிந்து வந்த குடிநீர் வாரியத்தினர் நடத்திய ஆய்வில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டதை கண்டறிந்தனர். பள்ளத்தை சீரமைக்கும் பணியில் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.