உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான கண்ணாடியில் மீண்டும் விரிசல்

விமான கண்ணாடியில் மீண்டும் விரிசல்

சென்னை, 'இண்டிகோ' விமானத்தில் மீண்டும் விரிசல் விழுந்த சம்பவம், பீதியை ஏற்படுத்தியது. துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் 2:04 மணிக்கு 'இண்டிகோ' விமானம் புறப்பட்டது. சிறிய ரக விமானம் என்பதால், 67 பேர் இருந்தனர். விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. சுதாரித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், மாலை 3:27 மணிக்கு, சென்னையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே, பயணியர் நிம்மதியடைந்தனர்.  கடந்த 10ம் தேதி இரவு சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டு, மீண்டும் சென்னையில் அவசரமாக வந்து தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. பயணிக்கு மூச்சு திணறல் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, மலேஷியா நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு, 290 பயணியருடன் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. விமானம் நள்ளிரவு சென்னை வான்வெளியை கடந்து பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர், சுவாசிக்க முடியாமல் தவித்தார். இதையறிந்த விமான பணிப்பெண்கள், தலைமை விமானிக்கு தகவல் தந்தனர். அவர் உடனே, விமான நிலைய வான் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சென்னையில் தரையிறங்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விமானம் நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது. தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி பெண் பயணிக்கு, 'ஆக்சிஜன்' உதவி அளித்தனர். பின், பயணி வழக்கமான நிலைக்கு திரும்பினார். விமானம் காலை 5:40 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ