உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

மொபைல் போன் திருடியவர் சிக்கினார் கோயம்பேடு: கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நான்காவது நடைமேடையில் நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்த பயணியர் வைரசெல்வன், சுப்பிரமணி ஆகியோரின் மொபைல் போன்களை மர்மநபர் திருடியுள்ளார். இதை கவனித்த நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், 29, என்பவர் துரத்தி சென்றும் பிடிக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், திருட்டில் ஈடுபட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விஜய், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். பைக்கை சேதப்படுத்திய போதை நபர் கைது பெரம்பூர்: பெரம்பூர், அகரம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 52. இவரது ‘யமஹா ஆர்.டி.,’ பைக்கை, நேற்று முன்தினம் இரவு அகரம் கண்ணபிரான் தெருவில் நிறுத்தினார். அதே தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாஞ்சா கார்த்திக், 30, என்பவர், மதுபோதையில் ரமேஷின் இருசக்கர வாகனத்தை உடைத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் நேற்று கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை