கிரைம் கார்னர்
தலைமறைவு குற்றவாளிகள் கைது சென்னை: திருவல்லிக்கேணி, பல்லவன் சாலையைச் சேர்ந்த செல்வம், 38, சந்துரு, 21, ஆகிய இருவரும், கடந்த 2023ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தால், கடந்த மார்ச் 3ம் தேதி, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் தலைமறைவானதால், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த 17ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று செல்வம், சந்துரு ஆகிய இருவரையும், திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.