மேலும் செய்திகள்
வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட கொலை குற்றவாளி கைது
30-Oct-2025
பைக் திருட முயன்றவர் சிக்கினார் மூவரசம்பட்டு: மூவரசம்பட்டு, ரகுபதி நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் வினோத்ரா, 27. இவர், தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கை, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதை, வாலிபர் ஒருவர் திருட முயன்றார். பிடிக்க முயன்றபோது தப்பினார். இது குறித்து விசாரித்த பழவந்தாங்கல் போலீசார், பைக் திருட முயன்ற, கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்த கண்ணன், 24, என்பவரை கைது செய்தனர். வழிப்பறி திருடர்கள் மூவருக்கு 'காப்பு' கோயம்பேடு: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முபாரக், 20; கோயம்பேடு சந்தை கூலித்தொழிலாளி. கடந்த 29ம் தேதி, சந்தை அருகே நடந்து சென்றபோது, வழிமறித்த கும்பல், முபாரக்கின் மொபைல் போனை பறித்து தப்பினர். கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், 20, கோயம்பேடு தீபக், 20, ஆகியோரை கைது செய்தனர். எஸ்.ஐ.,யின் மகன் தற்கொலை சென்னை: புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் குமார், 21; கல்லுாரி மாணவர். குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர் சென்னை: ஐஸ்ஹவுஸ் பகுதியில், கடந்த 2022ம் ஆண்டு கபாலி, 27, என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், கார்த்திக், 24, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தவர், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், 12ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார். அதேபோல, அடிதடி வழக்கில் தலைமறைவான பாலநரேந்திரன், 24, என்பவருக்கு, 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். போதை மாத்திரை விற்றவர்கள் கைது ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர், ஐ.ஓ.சி., யார்டு அருகே, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், 24, பகிருசின்னா, 19, ஆகிய இருவரையும் கைது செய்த ஆர்.கே.நகர் போலீசார், 80 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் கைது கொடுங்கையூர்: கொடுங்கையூர், குப்பைமேடு அருகில், பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்திய கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஜீவா, 26, ரோகேஷ், 22 ஆகியோரை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர். 'குட்கா' விற்ற கடைக்காரருக்கு 'கம்பி' வானகரம்: வானகரம் அடுத்த துண்டலம், திருவீதி அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் கண்ணன், 47. இவரது கடையில், சட்டவிரோதமாக 'குட்கா' புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. போலீசார் கடையில் நடத்திய சோதனையில், 7.5 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன.
30-Oct-2025