உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

குன்றத்துார் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பிரதான சாலை, சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சிராஜுதின் சம்சுதீன், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி, மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 கிராம் தங்க நகை, 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரை அடுத்து, படப்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி