உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் திருட்டு அம்பத்துார்: அம்பத்துார், எம்.கே.பி., நகர் பகுதியில் வடமாநில வாலிபர் வசித்து வரும் வீட்டிற்குள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 20,000 ரூபாய், மொபைல்போனை திருடினார். அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில், கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. குற்றங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது கண்ணகி நகர்: கண்ணகி நகரைச் சேர்ந்தோர் மணிகண்டன், 20, சசி, 19, சதீஷ், 20, ராஜு, 21, ஜோசப், 19. இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. பல மாதங்களாக, வேறு பகுதியில் வசித்த இவர்கள், சமீபத்தில் காரப்பாக்கம், கண்ணகி நகர் பகுதிகளில், மீண்டும் அதேபோன்ற குற்றங்களில் ஈடுபட தொடங்கினர். கண்ணகி நகர் போலீசார், ஐந்து பேரையும் நேற்று கைது செய்தனர். வீட்டில் மது விற்றவர் கைது கிண்டி: கிண்டி, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மவுநயினார், 35. ‘டாஸ்மாக்’ கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி, வீட்டில் பதுக்கி, ‘குடி’மகன்களுக்கு விற்று விந்தார். கிண்டி போலீசார், மவுநயினாரை நேற்று கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நண்பர்களுடன் தகராறு வாலிபர் கைது வியாசர்பாடி: கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த ‘ஏசி’ மெக்கானிக் யூனோஸ்குமாருக்கும், அவரது நண்பர்களுக்கும், வியாசர்பாடி, முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் தகராறு ஏற்பட்டது. இதில் யூனோஸ்குமார் மற்றும் பிரவீன்குமார் என்பவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. வியாசர்பாடி போலீசார் விசாரித்து, விக்னேஷ், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர். அடிதடி வழக்கில் ஒருவர் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சத்தியவாணி முத்துநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27; சென்னை மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர். இவரது வீட்டின் அருகே உள்ள நாகாத்தம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தீ மிதி திருவிழா நடந்து கொண்டிருந்தது. அங்கு மேளம் அடிக்கும் நபர்களிடம் ராமு என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை விக்னேஷ் தட்டிக்கேட்டபோது, ராமு மற்றும் அவருடன் இருந்தோர் விக்னேஷை கட்டையால் தாக்கினர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பேசின்பாலம் போலீசார் விசாரித்து, பாலு, 26, என்பவரை கைது செய்தனர். ராமு, விஜய் ஆகியோரை, தேடி வருகின்றனர். போதை மாத்திரை பதுக்கிய நால்வர் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் விளையாட்டு திடல் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த ஓட்டேரியைச் சேர்ந்த பார்த்திபன், 23, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து 20 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் கன்னிகாபுரத்தைச் சந்தோஷ், 19, கிஷோர்குமார், 20, மேத்யூ, 19, ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை