உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் சாம்பியன்

 ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் சாம்பியன்

சென்னை: பல திருப்பங்களும், கடும் மோதல்களும் நடந்த ஐ.எம்., நார்ம்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், க்யூபாவின் ஜார்ஜ் மார்கோஸ் தன் அசாத்திய ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், 35வது ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டி, சென்னையில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், ஐந்து இந்திய வீரர்களும், மற்ற நாட்டு வீரர்களும் நேரடியாக மோதினர். நேற்று நடந்த, இறுதி சுற்றில், க்யூபாவின் ஜார்ஜ் மார்கோஸ், பெரு நாட்டின் கார்லோமாக்னோ ஒப்லிடாஸ் மோதினர். இதில், 21வது நகர்வில் வெற்றி வெற்ற ஜார்ஜ் மார்கோஸ், மொத்தம் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நிறைவு விழாவில், கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர், வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில், 'பிடே' முன்னாள் துணைத் தலைவர் சுந்தர், மாநில சதுரங்க சங்கச் செயலர் ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீரர் புள்ளி பிடித்த இடம் ஜார்ஜ் மார்கோஸ், க்யூபா 6.5 1 ஹேமந்தராம், தமிழகம் 6 2 அனிருத் போடாவ், மஹா., 5.5 3 ஓடெரோ டையாஸ்மனி, க்யூபா 5 4 பரத் கல்யாண், தமிழகம் 4.5 5 - ஒரு வீரர், மூன்று ஐ.எம்., நார்ம்ஸ் விதிகள் மற்றும் 2,400 ரேட்டிங் பெற்றால், சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைக்கும். அதற்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒன்பது சுற்றுகள் முடிவில் குறைந்தது 6.5 புள்ளிகளை பெற்றால் ஒரு ஐ.எம்., நார்ம்ஸ் விதிகளை பெற முடியும். தமிழக வீரர்கள் இந்த 6.5 புள்ளிகளை எட்டாதது, ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி