உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறுதிச்சடங்கிற்கு வந்த வாலிபருக்கு வெட்டு

இறுதிச்சடங்கிற்கு வந்த வாலிபருக்கு வெட்டு

புதுவண்ணாரப்பேட்டை, அக். 23-தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 4வது தெருவைச் சேர்ந்த பிரவீன், 22; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, சாலை விபத்தில் இறந்த புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்த ஹரிஷ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நண்பர்களுடன் அங்கு வந்தார்.அப்போது, பிரவீனுக்கும், அங்கிருந்து மற்றொரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இதில், எதிர் தரப்பைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரவீனை வெட்டி, நண்பர்களுடன் தப்பியோடி விட்டார்.காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் தொடர்புடைய காசிமேடைச் சேர்ந்த சந்தோஷ், 21, சஞ்சய், 23, விஷ்வா, 21.புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்த தீனா, 20, திருவொற்றியூரைச் சேர்ந்த சஞ்சய், 21, ஆகிய ஐந்து பேரை, நேற்று காலை கைது செய்தனர்.விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த சஞ்சய் என்பவரின் தம்பியான குப்பனை, சில மாதங்களுக்கு முன் பிரவீன் தாக்கியுள்ளார்.அந்த முன்விரோதம் காரணமாகவே, பழிவாங்கும் நோக்கில் தன் நண்பர்களுடன் சேர்ந்து, இறுதிச் சடங்கிற்கு வந்த பிரவீனை தாக்கியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !