உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த மின் கேபிள் பட்டுமேடு மக்கள் அச்சம்

சேதமடைந்த மின் கேபிள் பட்டுமேடு மக்கள் அச்சம்

அடையாறு மண்டலம், 171வது வார்டு, பட்டினம்பாக்கம், பட்டுமேடு பகுதியில், கழிவுநீர் வெளியேற்று நிலையம் உள்ளது. இதன் அருகில், மின் இணைப்பு பெட்டி உள்ளது.இதில் இருந்து, மின்சார கேபிள்கள் செல்கின்றன. கேபிளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு பெட்டியையும் முறையாக பாதுகாக்காமல், துருப்பிடித்த நிலையில் உள்ளது.ஈரப்பதம் உள்ள பகுதியானதால், மின் கேபிளால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நாட்களுக்குமுன், சேதமடைந்த கேபிளில் மின்கசிவு ஏற்பட்டு, தீக்கனல் வெளியானது.ஈரப்பதத்தில் மின்சாரம் பாய்ந்தால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து, மின்கேபிளை அகற்றி, பெட்டியை பாதுகாக்க வேண்டும்.- என்.கண்ணபிரான், 52,பட்டினம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ