உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டை உரசி செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

வீட்டை உரசி செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

மாதவரம் மண்டலம், 26வது வார்டுக்குட்பட்ட அலெக்ஸ் நகர் ஏ காலனி 2வது தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், மின்கம்பிகள் வீட்டை உரசியபடி செல்கின்றன. இதுகுறித்து பலமுறை கூறியும் மாதவரம் மின் வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்பலி அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறைந்தபட்சம் மின் கம்பங்களை இடம் மாற்றி பிரச்னையை சரி செய்யலாம். அல்லது புதைமின் வட இணைப்பை மாற்றித்தரலாம். இது எதையும் செய்ய மின்வாரியத்தினர் முன்வரவில்லை. மின் கம்பியில் பைப் மட்டும் போட்டுச் செல்கின்றனர்.- பகுதிவாசிகள், அலெக்ஸ் நகர், மாதவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
பிப் 04, 2025 10:49

பட்டா லேகியம். படாட்டா பாக்கியம். இந்தியாவில் எதுவும் பாதுகாப்பில்லை. எல்லாமே ச்சீப்பா, இலவசமா கிடைக்கணும்கற பேராசை. ஒருவேலை செத்தா அம்பது லட்சமும், அரசு வேலையும் கேப்பாங்க.


Rajendran Chockalingam
பிப் 04, 2025 09:41

இதே போல் குமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் மின்சார அலுவலகத்தில் புகார் செய்தும் குயத்தியரறை என்ற கிராமத்தில் புகார் அளித்து, மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை. வீட்டின் சுவரை ஒட்டியே செல்கிறது.


சமீபத்திய செய்தி