உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழில் உரிமம் புதுப்பிக்க மே 31 வரை கால அவகாசம்

தொழில் உரிமம் புதுப்பிக்க மே 31 வரை கால அவகாசம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 65,822 வணிகர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு, ஒன்று முதல் மூன்றாண்டுகள் வரை, தொழில் உரிமத்தை புதுப்பித்து வருகின்றனர்.நடப்பாண்டில், 32,551 வணிகர்கள் தங்களது தொழில் உரிமத்தை புதுப்பித்து உள்ளனர். மீதமுள்ள வணிகர்கள், தொழில் உரிமத்தை அபராதம் இன்றி புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக, இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்குமாறு, சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்தார்.அதன்படி தொழில் உரிமம் தொடர்பான விதி, 290 திருத்தம் செய்யப்பட்டு, 300 'ஏ' என்ற புதிய விதி சேர்க்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளன.தொழில் உரிமம் புதுப்பிக்க, மே 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை வணிகர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரி பானுச்சந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ