அரசின் அலட்சியத்தால் உயிர் பலி அதிகரிப்பு
சென்னை சென்னை அருகே தாம்பரத்தில், கடைக்கு சென்ற அஸ்வின் என்ற 35 வயது இளைஞர், மின் கம்பத்தில் இருந்த ஒயர் உரசியதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, முறையான பராமரிப்பின்றி கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்தும், உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. தி.மு.க., அரசின் அலட்சியத்தால் தொடரும் உயிர் பலிகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம். இன்னும் சில வாரங்களில் பருவ மழைக் காலம் துவங்க இருப்பதால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.