சேதமடைந்த 18 கட்டடங்களை இடிக்க முடிவு
சென்னை:சென்னையில் மிகவும் சேதமடைந்துள்ள, 18 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்மா உணவகம், பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் உள்ள உரக்கிடங்கு, கண்ணகி நகர், சோழிங்கநல்லுார், காரப்பாக்கத்தில் உள்ள குப்பை தரம் பிரிப்பு மையங்கள், நுாலகம், துவக்க பள்ளி வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட, 18 கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன. இந்த கட்டடங்கள், பலத்த கனமழை பெய்தால் இடியும் நிலையில் உள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், இந்த கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணி, ஓரிரு நாட்களில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.