மேலும் செய்திகள்
பாரதி பாசறையின் 14 ஆண்டு தொடர் சொற்பொழிவு நிறைவு
3 minutes ago
துணை மின் நிலையம் திறப்பு
19 minutes ago
சிசிடிவிக்களை சேதப்படுத்திய லாரியை தேடும் மாநகராட்சி
24 minutes ago
இன்று கச்சேரி
25 minutes ago
சென்னை: பாரிமுனை பகுதியில், துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சென்ட்ரலில் இருந்து பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். சென்னை, துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், துணை முதல்வர் உதயநிதி, நேற்று மாலை பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர், பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெருவில் நடந்து சென்று, குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார். அப்பகுதி மிகவும் குறுகலானது என்பதால், சாலைகளில் கார்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், அப்பகுதி முழுதும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் ஸ்தம்பித்தன. இதனால், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் திடீரென மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், பொதுமக்களும், ரயில் மற்றும் பேருந்து பயணியரும் அவதிக்கு உள்ளாகினர்.
3 minutes ago
19 minutes ago
24 minutes ago
25 minutes ago