உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நங்கநல்லுாரில் பக்தி திருவிழா

நங்கநல்லுாரில் பக்தி திருவிழா

நங்கநல்லுார், ஆன்மிகத்தை பரப்பும் விதமாக, நங்கநல்லுாரில் நேற்று பக்தி திருவிழா நடத்தப்பட்டது. சேவாஸ்ரீ மற்றும் இன்பினேட் சேவா ஆகிய அமைப்புகள் இணைந்து, நேற்று மாலை நங்கநல்லுாரில் பக்தி திருவிழாவை நடத்தின. அதில், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. இன்பினேட் சேவா அமைப்பின் தலைவரும், கனரா வங்கி இயக்குநருமான நளினி பத்மநாபன் கூறியதாவது: தமிழகத்தில், கேட்பாரின்றி நலிவுற்ற நிலையில் உள்ள, 108 கோவில்களை புனரமைத்து, தினமும் பூஜை செய்கிறோம். இதற்காக, ஒவ்வொரு கோவிலிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்கிறோம். ஒவ்வொரு கோவில் சார்பில், கோதானம் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு ஒரு பசு வாங்கி கொடுக்கிறோம். தினமும் ஒரு லிட்டர் பால் கறந்து, கோவிலுக்கு கொடுக்க வேண்டும். நலிவுற்ற கோவில்களை கண்டறிந்து, பூஜை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். சேவாஸ்ரீ அமைப்பின் நிர்வாகி செளரிராஜன் பேசியபோது, “எங்கள் அமைப்பு சார்பில், தனித்திறன் சார்ந்த குழந்தைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களின் திறனை வெளி உலகுக்கு கொண்டு வருகிறோம். நடைபயணம் வாயிலாக ஆன்மிகத்தை வளர்க்கிறோம்,” என்றார். இந்நிகழ்ச்சியில், மருத்துவர் சத்யநாராயணன், வழக்கறிஞர் ராகவன், பத்மநாபன், சேவாஸ்ரீ அமைப்பு நிர்வாகிகளான லதா ராமானுஜம், சுஜாதா ஸ்ரீஹரி, லட்மிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை