உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருநீர்மலையில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்

தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருநீர்மலையில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்

திருநீர்மலை:திருநீர்மலையில் நடந்த 'தினமலர்' கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை உற்சாகத்துடன் பங்கேற்று அரங்கம் அதிர கொண்டாடி மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அந்த வரிசையில், பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் உள்ள டெம்பிள் டவுன் தெருவில் உள்ள 'ஜெயின்ஸ் அல்பைன் மேடவுஸ்' அடுக்கு மாடி குடியிருப்பில், நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் 'டயா பூஸ்ட்டர்' நிறுவனம் இணைந்து நடத்தியது. உடன், 'ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரடக்ட்' உள்ளிட்ட நிறுவனங்களும் கைகோர்த்தன. நேற்று மாலை துவங்கிய நிகழ்ச்சியில் குடியிருப்பின் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கான ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெற்றன. மினி மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் 'டயா பூஸ்ட்டர்' நிறுவனம், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலவசமாக வழங்கியது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளால், இரவு வரை குடியிருப்பு வளாகமே உற்சாகத்தில் அதிர்ந்தது. Gallery 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியை, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம். குழந்தைகளுக்கு நாள்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தியது. - ஆர்.கல்யாண கிருஷ்ணன், 65. நாங்கள், 'தினமலர்' நாளிதழின் பல ஆண்டு கால வாசகர். இந்த குடியிருப்பில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால், 'தினமலர்' நிகழ்ச்சி போன்று நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சி, சிறப்பாகவும், குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்தது. - ஆர்.காயத்ரி, 52. குடியிருப்பு வளாகத்திலேயே 'ஷாப்பிங்' செய்த அனுபவம் கிடைத்தது. இங்கு போடப்பட்ட ஸ்டால்கள் பயனுள்ளவையாக இருந்தன. அதேபோல, கோலம் உள்ளிட்ட பெண்களுக்கான போட்டிகள், உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்தது. - வி.ஜோதி, 63.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ