மேலும் செய்திகள்
ரயில் மோதி ஒருவர் பலி
09-Dec-2024
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை அடுத்த கோவிலாஞ்சேரி 'டாஸ்மாக்' அருகே, தனியார் தண்ணீர் நிரப்பும் ஆலை உள்ளது.இதன் அருகே ஒருவர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் தகவல் வந்தது. சேலையூர் மற்றும் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.இதில், தண்ணீர் நிரப்பும் ஆலைக்கு வந்த லாரி பின்னோக்கி வந்தபோது, மதுபோதையில் சாலையோரம் உறங்கியவர் தலை மீது, லாரி ஏறி, இறங்கியது தெரியவந்தது.இறந்தவர் சித்தாலப்பாக்கம், என்.எஸ்.கே., தெருவைச் சேர்ந்த கந்தசாமி, 48, என்பதும், மாற்றுத்திறனாளியான இவர், ஓர் உணவகத்தில் காய்கறி வெட்டும் தொழில் செய்ததும் தெரியவந்தது.பலியான கந்தசாமிக்கு திலகவதி என்ற மனைவியும், மிருத்திகா என்ற மகளும் உள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார், தண்ணீர் லாரி ஓட்டுனரான, திருநெல்வேலியை சேர்ந்த முத்துகுமார், 26, என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
09-Dec-2024