மாற்றுத்திறன் மாணவர்கள் சாலையில் நடக்க சிரமம்
பூந்தமல்லி, டிச. 3--பூந்தமல்லி, கரையான்சாவடியில், 1931ம் ஆண்டு முதல் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளி வளாகத்தில், பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கு தொழிற்பயிற்சி மையம், மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர்.இந்த பள்ளி வெளியே, நெடுஞ்சாலையோரம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், இந்த சாலையோரம் சிமென்ட் கற்களை பயன்படுத்தி, நடைபாதை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.