உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 27ல் மாவட்ட கேரம் பிராட்வேயில் துவங்குகிறது

வரும் 27ல் மாவட்ட கேரம் பிராட்வேயில் துவங்குகிறது

சென்னை, மாவட்ட 'ரேங்கிங் கேரம்' போட்டிகள், வரும் 27 முதல், டிச., 1ம் தேதி வரை, பிராட்வேயில் நடக்க உள்ளன.டான்பாஸ்கோ இளைஞர் மையம், மாவட்ட அளவிலான,'ரேங்கிங்' எனும் தரவரிசை கேரம் போட்டியை, பிராட்வேயில் உள்ள மையத்தில், வரும் 27ம் தேதி துவங்கி, டிச., 1ம் தேதி வரை நடத்துகிறது.இருபாலருக்கான ஒற்றையர், பதக்கம் அல்லாத பிரிவு மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட சப் - ஜூனியர் இருபாலர் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.உலக போட்டியில் பதக்கம் வென்ற, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல வீராங்கனை காசிமா உள்ளிட்ட பல்வேறு வீரர், வீராங்கனையர் இதில் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், நாளைக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 98413 06430, 94442 14759 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை