உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட அளவிலான கேரம் டில்லிபாபு, கீர்த்தனா சாம்பியன்

மாவட்ட அளவிலான கேரம் டில்லிபாபு, கீர்த்தனா சாம்பியன்

சென்னை:சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், ஆண்கள் பிரிவில் டில்லிபாபு, பெண்கள் பிரிவில் கீர்த்தனா ஆகியோர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., கோடம்பாக்கம் கிளை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் போட்டி, கடந்த 14ம் தேதி, அசோக் நகர், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் துவங்கியது. இப்போட்டியில், ஆடவரில் 96 பேர்; பெண்களில் 32 பேர்; பதக்கம் அல்லாத பிரிவில், 112 பேர்; சப் - ஜூனியர் சிறுமியரில் 30 பேர்; சிறுவரில் 90 பேர் என, மொத்தம், 360 வீரர்கள் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் இறுதிப் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் பிரிவில், எல்.ஐ.சி., வீரர் டில்லிபாபு, ஜி.எஸ்.சி.ஏ., வீரர் அப்துல் ஆசிப் ஆகியோர் மோதினர். இதில், 21 - 3-7, 20- - 19 என்ற புள்ளிகள் கணக்கில் டில்லிபாபு வெற்றி பெற்றார்.பெண்கள் பிரிவில், கீர்த்தனா, வர்ஷினி ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதினர். இதில், 25- - 3, 25- - 8 என்ற புள்ளிகள் கணக்கில் கீர்த்தனா வெற்றி பெற்றார். தவிர, 14 வயது பெண்கள் பிரிவில் டெனியா, ஆண்கள் பிரிவில் தர்ஷன் ஆகியோர் சாம்பியன் கோப்பை வென்றனர். பதக்கம் அல்லாதோர் பிரிவில், செந்தமிழ் கவி பாரதி முதலிடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை