குடிநீர் திட்டம் முடங்க தி.மு.க., அரசே காரணம்
மீஞ்சூரில் உள்ள 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், 2024 முதல் செயல்படாதது குறித்து பல முறை சுட்டிக்காட்டியும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய ஒப்பந்ததாரரை, சென்னை குடிநீர் வாரியம் நியமிக்கவில்லை. இதனால், வடசென்னை மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 120 ரூபாய் கொடுத்து, தண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் முடங்கியதற்கு, தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம். பல சாதனைகளை செய்ததாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள சோதனையை களைந்து, அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்