உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்

தி.மு.க., ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்

சென்னை, தி.மு.க., சார்பில் மவுன ஊர்வலம் நடைபெறும் சாலைகளில், போக்குவரத்து மாற்றம் தேவைப்பட்டால் அமல்படுத்தப்படும் என, காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலையிலிருந்து, காமராஜர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடம் வரை, தி.மு.க., சார்பில் இன்று மவுன ஊர்வலம் நடைபெற உள்ளது.போக்குவரத்து தடையின்றி செல்ல, சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேவைப்பட்டால், போர் நினைவுச் சின்னத்திலிருந்து - நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும். மெரினா காந்தி சிலையிலிருந்து - நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், பாரதி சாலை வழியாக திருப்பி விடப்படும்.வாலாஜா சாலை, அண்ணா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு, இந்த சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் சென்று தங்களது இலக்கை அடையலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை