அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
போரூர், அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதிப்பாக பேசியதை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.போரூர் சந்திப்பில், தி.மு.க., சார்பில் மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உருவப்படத்தை எரித்தனர். அதேபோல் கீழ்ப்பாக்கத்தில், மார்க்.கம்யூ., கட்சி பொது செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது.சென்னை முழுதும், இதுபோல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடந்த இடங்களில் எல்லாம், வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது;வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.