உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.கே.நகரில் 3,000 பேருக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி

கே.கே.நகரில் 3,000 பேருக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி

சென்னை, தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை, அக்கட்சியின், மாநில வர்த்தகர் அணி செயலர் காசிமுத்துமாணிக்கம் வழங்கினார்.கே.கே.நகரில், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் தனசேகரன் ஏற்பாட்டில், 3,000 பேருக்கு தையல் மிஷின், பால் குக்கர், மிக்சிகளை காசிமுத்துமாணிக்கம் வழங்கி பேசியதாவது:தமிழகத்தில் மட்டும் அதிகமாக படித்து, அதிகமாக கேள்வி கேட்கின்றனர். இதனால், அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என, பல வகையில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது.கடந்த 1965ல் ஹிந்தி மொழியால், கல்வியில் தமிழர்களின் கனவை சிதறடிக்க பார்த்தது. பின், நீட் தேர்வை புகுத்தி ஓரளவு நம்மை பலவீனமாக்கியது. தொடர்ந்து, விஸ்வகர்மா திட்டத்தை திணித்தது. ஹிந்தி படிக்காவிடில் ஆண்டுக்கு, 9,000 கோடி ரூபாய் இல்லை என்றது. 'பணம் போனாலும் பரவாயில்லை. என் மண், மானம் வீழ விட மாட்டேன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறி, 9,000 கோடி ரூபாயை தமிழக அரசு தரும் என்றார். அதிலும், அவர்களின் கனவு தோல்வி அடைந்தது.இப்போது கோவில்கள் வாயிலாக, படிக்கும் மாணவர்களின் கல்வியை தடுக்க பார்க்கிறது. கோவிலால் கல்லுாரிகள் என்பது உங்கள் காலத்தில் குறைவு; எங்கள் காலத்தில் நிறைவு. அதற்கு காரணம் நிர்வாகச் சிறப்பு. இந்த ஆட்சியில் இதுவரை, 3,200 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
ஜூலை 16, 2025 16:57

Dear DMK , while take Hindu Temple money for construction of government colleges , why do not you , take money from Waqf board and Christian Churches also and construct government colleges . Because you know Hindus are ignorant and innocent . Still we wonder , if there is any help to ladies, mean donating sewing machines and to gents mean iron boxes , our Dravidian DMK treats people are fit for tailoring and laundry not for any other profession .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை