உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் வலம்புரி விநாயகர் கோவில் ஸ்ரீனிவாசனுக்கு சிறப்பு பூஜை

தி.நகர் வலம்புரி விநாயகர் கோவில் ஸ்ரீனிவாசனுக்கு சிறப்பு பூஜை

தி.நகர், அதி.நகர், ராமகிருஷ்ணாபுரம் திலக் தெருவில், ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் கோவில், மற்றும் சிவசக்தி வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.புரட்டாசி மாத 3வது வாரத்தை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தங்க வைர நகைகளுடன் எழுந்தருளிய ஸ்ரீனிவாச பெருமாள் - - பத்மாவதி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.இரவு ஸ்ரீனிவாச பெருமாளின் வீதியுலா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று உற்சவருக்கு சுதர்சன ஹோமமும், அதைத் தொடர்ந்து, கலசாபிஷேக பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பத்ரி நாராயண பட்டாசார்யார் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிவாசிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !