உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய் பிடிக்கும் ஊழியர் மயங்கி விழுந்து பலி

நாய் பிடிக்கும் ஊழியர் மயங்கி விழுந்து பலி

புளியந்தோப்பு:ஓட்டேரி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 40; திரு.வி.க., நகர், ஆறாவது மண்டலத்தில் நாய் பிடிக்கும் வேலை செய்து வந்தார்.நேற்று காலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை அருகே, நாய் பிடிக்கும் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, மயக்கம் வருவதாக கூறி, அருகில் உள்ள கடையில் சோடா வாங்கி குடித்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை