உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய் தொல்லை 6 மாதத்தில் தீரும்: மேயர் பிரியா உறுதி

நாய் தொல்லை 6 மாதத்தில் தீரும்: மேயர் பிரியா உறுதி

சென்னை: ''தெருவில் நாய்களுக்கு உணவு அளிப்போரால்தான், சென்னையில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நாய் தொல்லை பிரச்னை ஆறு மாதங்களில் தீரும்,'' என, சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில், சாலை பராமரிப்பு பணிகளுக்கு, 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களை பிடிக்கும், 5 வாகனங்கள் உட்பட, 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டை மேயர் பிரியா, நேற்று துவக்கி வைத்தார். பின், மேயர் பிரியா அளித்த பேட்டி: நாய்கள் நல ஆர்வலர்கள் உணவு அளிப்பதால், சென்னையில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு, நாய்கள் நல ஆர்வலர்கள், நாய்களை பராமரிக்க முன்வர வேண்டும். சென்னையில் உள்ள, 1.80 லட்சம் தெருநாய்களில், 60 சதவீதம் நாய்களுக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், 'சிப்' பொருத்தக்கூடிய பணிகளும் நடந்து வருகிறது. நாய்கள் கருத்தடை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் நாய் தொல்லை பிரச்னை தீர்வுக்கு வரும். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணி முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பணிகள் நடந்து வருகிறது. அதேநேரம், சாலை வெட்டு பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணிக்கு திரும்பாமல் உள்ள துாய்மை பணியாளர்கள், எப்போது வந்தாலும் பணியில் சேரலாம். இப்போது வந்தாலும் உடனே பணி ஆணை வழங்கப்படும். கொடி கம்பங்கள் விவகாரத்தில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசித்து நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை