உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது

ரூ.24 லட்சம் போதை பொருள் எழும்பூரில் சிக்கியது: 2 பேர் கைது

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகே, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, 'ஹூண்டாய் ஐ - 20' காரில் வந்த பெண் உட்பட இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களது முரண்பாடான பதிலால், காரில் சோதனை மேற்கொண்டனர். இதில், 705 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப் பொருள், 6 கிலோ கஞ்சா சிக்கியது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில், கோயம்பேடு, அழகப்பா நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், 39, என்பதும், கோயம்பேடு சந்தையில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் காய்கறி சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம், 24, என்பது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட கார், பத்திரிகையாளர் ஒருவருடையது என தெரிய வந்தது. மேலும். சிக்கிய போதைப் பொருளின் மதிப்பு, 24 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.விசாரணையில், பாத்திமா பேகமும், சாய்தீன் என்பவரும், அசாமில் இருந்து போதைப் பொருட்களை ரயிலில் கடத்தி வந்து, பாலசுப்ரமணியனிடம் கொடுப்பதும், அவற்றை அவர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துது. பாலசுப்ரமணியன் மீது, மும்பையில் தங்க கடத்தில் வழக்கு உள்ளது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை