உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேத்துப்பட்டில் 16 மீ., ஆழத்தில் மெட்ரோவுடன் மின் ரயில் இணைப்பு

சேத்துப்பட்டில் 16 மீ., ஆழத்தில் மெட்ரோவுடன் மின் ரயில் இணைப்பு

சென்னை, சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.இவற்றில், ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் 45.4 கி.மீ., வரையிலான வழித்தடத்தில், 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, மேம்பால பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையம் அருகே, சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பெரம்பூர், சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையங்களுடன், மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்பட உள்ளன.சேத்துப்பட்டில், 16 மீ., ஆழத்தில் 150 மீ., நீளம், 19 மீ., அகலத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. மற்ற கட்டுமானப்பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன.மின்சார ரயில் நிலையத்துக்கு பயணியர் செல்லும் வகையில், பாதசாரிகள் பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகள், 2028ல் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை