கல்லுாரியில் மண்ணுளி பாம்பு
கொளத்துார்:கொளத்துாரில், தனியார் கல்லுாரி ஒன்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை, அங்கு பாம்பு ஒன்று இருப்பதாக, தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த கொளத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கிருந்த 4 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டு, வேளச்சேரி வனத்துறை அலுவலகம் எடுத்துச் சென்றனர்.