உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்வித்துறை பால் பேட்மின்டன் கத்திவாக்கம் அரசு பள்ளி அசத்தல்

கல்வித்துறை பால் பேட்மின்டன் கத்திவாக்கம் அரசு பள்ளி அசத்தல்

சென்னை, பள்ளி கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டியில், 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட இரு பிரிவுகளிலும், கத்திவாக்கம் அரசு பள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியது.பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டி, திருவொற்றியூர், கத்திவாக்கம் அரசு பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 17 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், 14 மற்றும் 19 வயது பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், தென்சென்னை மற்றும் வடசென்னை அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மோதின. அந்தவகையில், 14 வயது பிரிவில், கத்திவாக்கம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை வேளாங்கண்ணி பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 35 - 27, 35 - 24 என்ற கணக்கில், கத்திவாக்கம் அரசு பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.அதேபோல், 17 வயது பிரிவில் கத்திவாக்கம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை வேளாங்கண்ணி பள்ளி அணிகள் மோதின. அதிலும், 37 - 35, 35 - 13 என்ற கணக்கில், கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். இரு போட்டிகளில் முதலிடத்தை பிடித்த கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அணிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ