உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொங்கலுக்கு முன் திறக்க முயற்சி

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொங்கலுக்கு முன் திறக்க முயற்சி

ராயபுரம் ''கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை, பொங்கலுக்கு முன் திறக்க, தமிழக அரசு சார்பில், தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ராயபுரம், கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில், 1.32 கோடி ரூபாய் மதிப்பில், 'ஏசி' வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்த பணியை துவக்கி வைத்தபின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் சரியான திட்டமிடல் இன்றி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக தமிழக அரசு சார்பில், 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, தென்னக ரயில்வே பொது மேலாளர், சில தினங்களுக்கு முன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். ஜனவரி மாதத்தின் துவக்கத்திலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறந்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இது தொடர்பாக, அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை