மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
12-Feb-2025
செம்பியம்: வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; மீன்பாடி வண்டி ஓட்டுநர். நேற்று முன்தினம், அவரது தங்கை வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றிக்கொண்டு பெரம்பூர், சுப்பிரமணியம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த மூவர், முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தர மறுக்கவே, மர்ம நபர்கள் சுப்பிரமணியை தாக்கி, 1,500 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர். காயமடைந்த அவர், பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Feb-2025