உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்துாக்கியில் தலை நசுங்கி முதியவர் உயிரிழப்பு

மின்துாக்கியில் தலை நசுங்கி முதியவர் உயிரிழப்பு

மயிலாப்பூர், தாம்பரம், சேலையூரைச் சேர்ந்தவர் எல்லப்பன்,76. இவர், நேற்று முன்தினம் மயிலாப்பூர், தெற்கு மாடவீதியில் உள்ள ஒரு அறக்கட்டளை கட்டடத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை காண வந்தார்.கட்டடத்தின் முதல் மாடியில் நிகழ்ச்சி நடந்த நிலையில், மின்துாக்கியில் செல்ல, தரை தளத்தில் எல்லப்பன் காத்திருந்தார். மேலே சென்ற மின் துாக்கி கீழே வர தாமதமானதால், மின் துாக்கி கதவைத் திறந்து, எட்டிப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், மின்துாக்கி சட்டென கீழே இறங்கியுள்ளது. இதில், எல்லப்பனின் தலை சிக்கி நசுங்கி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அங்கிருந்தோர், இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எல்லப்பனின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். மின் துாக்கியை இயக்கிய கிேஷார், பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி