உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாயுமானவர் திட்டத்திற்கு முதியோர் வரவேற்பு

தாயுமானவர் திட்டத்திற்கு முதியோர் வரவேற்பு

ராயபுரம் : வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டம் மிகவும் பயனளிக்கும் என, மூத்த குடிமக்கள் வரவேற்றுள்ளனர். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாகளின் வீடுகளுக்கே சென்று, 'ரேஷன்' பொருட்களை வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை அரசு நேற்று துவக்கியது. முதல்வர் ஸ்டாலின், தண்டையார்பேட்டையில் திட்டத்தை துவக்கி வைத்தார். முதியோர் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர், ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சைதாப்பேட் மசூதி தெருவில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு சென்று, ரேஷன் பொருட்களை வழங்கினார். வெயிலின் இனி காத்திருக்க வேண்டியதில்லை என, முதியோர் தெரிவித்துள்ளனர். ''பேரன், பேத்திகள் உதவியுடன் ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை வாங்கி வந்தேன். வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள் திட்டத்தால், யாரின் உதவியும் தேவையில்லை. - என்.தேவிகா, 74, கோபால் நகர், 3வது தெரு, தண்டையார்பேட்டை ''முதல்வர் வந்து ரேஷன் பொருட்களை கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. உதவித்தொகை சரியாக கிடைக்கிறதா என முதல்வர் கேட்டார். 'சரியாக கிடைக்கிறது' என்றேன். இனி, வெயில் நேரத்தில் எங்களால் நீண்ட நேரம் ரேஷன் கடையில் நிற்க முடிவதில்லை. இது பயனுள்ள திட்டம். - ஏ.மீனாட்சி, 71; கோபால் நகர், 3வது தெரு, தண்டையார்பேட்டை ''ரேஷன் கடைகளில் ரொம்ப நேரம் நின்று பொருள்களை வாங்கி வருவேன். சில நேரங்களில், நிற்க முடியாமல் பாதியில் வீடு திரும்பி விடுவேன். தற்போது ரேஷன் பொருள்கள் வீடு தேடி வருவதால் எந்த பிரச்னையும் இல்லை. - எஸ்.சரஸ்வதி, 73; கோபால் நகர், 1வது தெரு, தண்டையார்பேட்டை ''நான் மனைவி, மகளுடன் வசித்து வருகிறேன். மனைவி ஊருக்கு சென்று விட்டால், தனியாக ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த திட்டம் தனியாக வாழும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வரபிரசாதமாக இருக்கும். - எம்.சக்திவேல், 38; அன்னை சத்யா நகர், தண்டையார்பேட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை