உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது

பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது

சென்னை, சேப்பாக்கம், சைடோஜி தெருவைச் சேர்ந்தவர் கவுரி, 75. டாக்டர். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு சோழிங்கநல்லுார் கிராமத்தில், 4,700 சதுரடி, 4,527 சதுரடி என இரண்டு நிலங்கள் உள்ளன. அடையாறை சேர்ந்த சங்கர் என்பவர், நிலத்திற்கான பவர் பெற்றுக் கொண்டு, போலியாக தன்னுடைய கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்து விற்றுள்ளார்.எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அடையாறு கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 51. அவர் ஆதரவு இன்றி தனியே வசித்து வந்த டாக்டர் கவுரிக்கு, மருத்துவமனை கட்டி தருவதாக கூறி, 2.22 கோடி ரூபாயும், 26 சவரன் நகையும், பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். மேலும் கவுரிக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, அவரது மனைவியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.விசாரணையில் இது தெரியவந்ததை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாறன் தலைமையிலான தனிப்படையினர், மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ